சுகாதார செய்தி
உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 07:42.20 மு.ப GMT ]
உடற்பயிற்சி செய்து முடித்த உடனே கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட்டால் ஆபத்தில் தான் முடியும்.

அதுமட்டுமின்றி நிபுணர்கள் பலர் உடற்பயிற்சி செய்த பின்னர் சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் தான் என்று கூறுகின்றனர்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உடற்பயிற்சி செய்தப் பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.

பிரட்

வெள்ளை பிரட் எனப்படும் மைதாவால் ஆன பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால் அவை உடலில் செல்லும் போது மிகவும் எளிதில் சர்க்கரையாக மாறிவிடும். எனவே அப்போது வேண்டுமெனில் நவதானியங்களால் ஆன பிரட்டை(கோதுமை பிரட்) சாப்பிடலாம்.

பழ ஜூஸ்

எவ்வளவு தான் பழங்கள் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், உடற்பயிற்சிப் பின்னர் உடனே சாப்பிடக் கூடாது. இதனால் அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும்.

ஒருவேளை ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது ஐஸ் துண்டுகள் போட்ட மூலிகை டீ அல்லது இளநீரை குடிக்கலாம். இது மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை

முட்டையானது உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான். ஏனெனில் அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது.

ஆனால் அவற்றை பொரியல் செய்து சாப்பிட கூடாது. அப்போது அதில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அதனை வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.

மில்க் ஷேக்

பொதுவாக மில்க் ஷேக் உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த மில்க் ஷேக்கை பழங்களால் செய்து சாப்பிடும் போது, அதில் சர்க்கரை அதிகமாகிவிடும்.

எனவே அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து பழங்களுக்குப் பதிலாக பாதாம் சேர்த்து செய்யலாம் அல்லது சாதாரண பாலாக குடிக்கலாம்.

காய்கறிகள்

காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அப்படியே வரும். ஆனால் அவற்றையே உடற்பயிற்சிக்குப் பின்னர் உடனே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்ததே வீணாகிவிடும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வாழைப்பழத்தின் நன்மைகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]
விரைவில் வருகிறது 3D மவுஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] []
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்]
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்]
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ]
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] []
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்]