ஆராய்சி செய்தி
முடி கொட்டுகிறதா? ஆண்களுக்கான சில டிப்ஸ்
[ சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2012, 02:45.43 மு.ப GMT ]
இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது.

இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும் சரியான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறீர்களோ, அதேப்போல் தலை வழுக்கை ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையிலேயே அழகாக காணப்படும் ஆண்களின் அழகைக் கெடுப்பதில், வழுக்கை முக்கிய பங்கை வகிக்கிறது.

இதனால் சில ஆண்களுக்கு திருமணம் கூட நடைபெறுவது கடினமான விஷயமாகிறது. எனவே ஆண்களே எதற்கும் கவலைப்படாமல் தலை வழுக்கை ஆவதற்குள் கவனமாக கூந்தலை பராமரித்து வருவதற்கு சில டிப்ஸ் இருக்கிறது.

1. நிறைய ஆண்கள் கூந்தல் ஸ்டைல் செய்கிறேன் என்று கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த ஜெல், கலர் என்று வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் உதிர்தல் தான் ஏற்படும்.

ஏனெனில் அவை தலையில் உள்ள மயிர்கால்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. ஆகவே எப்போதும் ஸ்கால்ப்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் ஆண்களுக்கு கூந்தல் குறைவாக இருப்பதால், அவர்கள் தினமும் கூட தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்கலாம். இதனால் ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும். கூந்தலும் வளரும்.

2. வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் தலையில் உள்ள மயிர் கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

3. எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமோ, அதேப்போல் கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும். மருத்துவர்களிடம் கூந்தல் உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று கேட்டால், அவர்களும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, ஜிங்க், காப்பர் மற்றும் புரோட்டீன் குறைவாக இருப்பதால், கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது என்று கூறுவார்கள்.

ஆகவே டயட்டில் முட்டை, ப்ராக்கோலி, கீரைகள் மற்றும் மீன் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

4. கூந்தலின் அடர்த்தியை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று. அதற்கு முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பீர் நல்ல பலனைத் தரும். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை கூந்தலுக்கு உபயோகித்து வந்தால், கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
Samsung Galaxy S4 கைப்பேசி விரைவில் Google Play தளத்தில்
750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
Ubuntu இயங்குதளத்துடன் கூடிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது Asus
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ]
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] []
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்]
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] []
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
அருமருந்தாகும் தயிர்
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:29.48 மு.ப ] []
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. [மேலும்]