சுகாதார செய்தி
பட்டு போன்ற கூந்தலுக்கு
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 02:30.15 மு.ப GMT ]
பெண்கள் தங்களுக்கு நீளமான, அடர்த்தியான, பட்டு போன்று கூந்தல் இருக்க வேண்டும் என்றே நினைப்பர்.

ஆனால் அவ்வாறு நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முறையான பராமரிப்பு இருக்க வேண்டும்.

ஆகவே அத்தகைய பராமரிப்பிற்கு அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் இருந்தே எந்த ஒரு பக்க விளைவு மற்றும் வறட்சி இல்லாமல், கூந்தலை பட்டுப் போன்று மாற்ற முடியும்.

1. வறட்சியான கூந்தலுக்கு முட்டை மற்றும் தயிர் மிகவும் சிறந்த பொருட்களாகும். அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 5 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் மூல்தானி மெட்டி ஆகியவற்றை நன்கு கலந்து முடிகள் மற்றும் முடிகளின் மயிர்கால்களில் நன்கு படும்படி தடவ வேண்டும்.

பின் அது நன்கு காய்ந்ததும், மைல்டு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். அதனால் முடியானது மென்மையாவதோடு, சுத்தமாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது ஒரு சிறந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னரும் கூட.

2. ஒரு ஸ்பூன் சீகைக்காய் பவுடரை ஒரு கப் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தலுக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால் கூந்தலானது வறட்சி இல்லாமல், மென்மையாகவும், பளபளப்போடும் மின்னும்.

3. வாழைப்பழம் ஒன்றை நன்கு பிசைந்துக் கொள்ளவும், பின் அதோடு ஒரு கப் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். அந்த கலவையை கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசி குளிக்க வேண்டும். இதனால் கூந்தலுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

4. தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, அதை கூச்தலின் மயிர்கால்களில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். அதனால் தலையில் இருக்கும் பொடுகு போவதோடு, வறண்ட கூந்தலும் மென்மையை அடையும்.

அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியமான கூந்தலைப் பெற, பயணம் செய்யும் போது கூந்தலை நன்கு துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு நாள் விட்டு கூந்தலை நீரில் அலச வேண்டும் மற்றும் படுக்கும் முன் நன்கு கூந்தலை நன்கு சீவிக் கொண்டு படுக்க வேண்டும். இவற்றாலும் கூந்தலானது நன்கு ஆரோக்கியத்துடனும், வறட்சி இல்லாமலும் இருக்கும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது
சுவாரஸ்யமான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்
மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க
இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்
வாழைப்பழத்தின் நன்மைகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] []
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்]
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
[ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ]
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்]
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]
விரைவில் வருகிறது 3D மவுஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] []
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்]
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்]