ஏனைய தொழிநுட்ப செய்தி
பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப நிபுணர் பதவி விலகப் போவதாக அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 11:19.45 மு.ப GMT ]
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தலைமை தொழிநுட்ப நிபுணர் பிரெட் டெய்லர், இன்னும் சில நாட்களில் தான் பதவி விலகப் போவதாகவும் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் நாஸ்டாக் ஸ்டொக் மார்க்கட்டில் பேஸ்புக்கின் பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அதாவது கடந்த மாதம் ஃபேஸ்புக்கின் பங்குகள் $38 டொலரிலிருந்து 21% வீதம் வீழ்ச்சியடைந்து $30 டொலருக்கு விற்பனையாகத் தொடங்கின.

Mr.டெய்லர் தனது பதவி விலகல் தொடர்பாக கூறுகையில், பேஸ்புக்கிலிருந்து விலகுவது தனக்கு கவலை அளிப்பதாக இருந்த போதும் புதிதாக நிறுவனம் ஆரம்பிப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது என்றார்.

மேலும் இந்த பதவி விலகல் மிக இலகுவான காரியமாகத் தனக்கு அமையவில்லை என்றும், பேஸ்புக்கின் தலைமைத்துவம் மற்றும் குழு மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.

இது தவிர பேஸ்புக்கில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளான பேஸ்புக் கமெரா, மற்றும் அப்பிள் நிறுவனத்திற்கான வசதிகள் என்பன குறித்து தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேஸ்புக்கின் ஸ்தாபகரான மார்க் சூக்கெர்பேர்க் டெய்லரின் பதவி விலகல் குறித்து கருத்துரைக்கையில், அவருடன் வேலை செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக இருந்தது எனவும், அவரும் அவரது குழுவினரும் பேஸ்புக்கிற்கு ஆற்றிய கடமை தொடர்பாக தனக்கு மிகுந்த விசுவாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்
வாழைப்பழத்தின் நன்மைகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]
விரைவில் வருகிறது 3D மவுஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] []
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்]
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்]
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ]
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] []
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்]