மைக்ரோசொப்ட் ஆபிஸ் வழங்கும் Powerpoint Presentation பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.இதன் மூலம் ஸ்லைடுகளை உருவாக்கலாம்.
உருவாக்கப்பட்ட ஸ்லைடுகளை காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.
Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ஷோவில் இது மிக உதவியாய் இருக்கும்.
குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப் பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.
Notes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத்தினை சிறிதாகவும், அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும்.
இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத் தான் செயல்படும். ஆனால் ஷா அவுட்லைன் கிடைக்காது.
Slide Show: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ஷாவினை இயக்கலாம்.
Black and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம்.
பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும். |