மருத்துவ செய்தி
மன அழுத்த பிரச்னைக்கு தீர்வாகும் ஏலக்காய்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 03:51.58 பி.ப GMT ]
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

1. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

2. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

3. மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும் போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

4. நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

5. வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

6. விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

7. வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்
Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள்
அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி உருவாக்கம்
விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையை அறிமுகப்படுத்துகின்றது நாசா
120 கிராம் எடையுள்ள உலகின் மிக ஒல்லியான அசென்ட் பி6 கைபேசி அறிமுகம்
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்
VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற
பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு
7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ]
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்]
குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] []
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] []
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ]
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்]
பறக்கும் துவிச்சக்க​ர வண்டி வெற்றிகரமா​க பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] []
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்]