சுகாதார செய்தி
வயதானாலும் இளமையுடன் தோற்றமளிக்க
[ புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2012, 01:58.12 மு.ப GMT ]
இன்றைய காலத்தில் முப்பது வயதானாலே அவர்கள் வயதானவர்கள் போன்று இருக்கிறார்கள். ஏனெனில் அதற்கு நாம் உண்ணும் உணவு முறை தான் காரணம்.

அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்துவிட்டால், சருமம் சற்று தளர்ந்தது போல் இருக்கும்.

ஆகவே அப்போது முதுமைத் தோற்றத்தை தடுக்க ஏதேனும் ஒரு சில மசாஜ்களை செய்ய வேண்டும். மேலும் ஆயில் மசாஜ் செய்வதால், உடலும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு பயன்கள் இருக்கின்றன.

திராட்சை எண்ணெய்: இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தளும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.

முகம் நன்கு பொலிவோடு எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முகத்திற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால் முகச்சுருக்கங்கள் நீங்கும்.

அவோகேடோ எண்ணெய்: நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான். ஆனால் இந்த அவோகேடோ எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்துவிடும்.

ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை விரைவில் போக்கிவிடும்.

நல்லெண்ணெய்: உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்சனையும் வராது. மேலும் இந்த எண்ணெய் சருமத்தினை உறுதியாக்கி, பருக்கள் மற்றும் பிம்பிள்களை நீக்கிவிடும்.

ஆலிவ் எண்ணெய்: எண்ணெய்களிலேயே மிகவும் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய் என்று சொல்லலாம். இது ஒரு அதிசய எண்ணெய் என்றும் கூறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது.

இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதோடு சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எந்த காரணத்தை கொண்டும் சூடேற்ற வேண்டாம். அவ்வாறு சூடேற்றினால் அதில் உளள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Opera Webkit இணைய உலாவி
நோய்களை விரட்டும் பாதாம்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] []
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்]
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய: 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:54.21 மு.ப ]
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] []
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்]
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] []
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்]
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ]
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]