சுகாதார செய்தி
முதுகுவலிக்கு தீர்வாகும் சூரியக்குளியல்
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 12:59.28 பி.ப GMT ]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் வாய்ப்புள்ளது.

மன அழுத்தம் இருந்தாலும் முதுகுவலி வரும் என்று கூறும் நிபுணர்கள், சூரிய வெளிச்சம் படாமல் ஏ.சி ரூமிலேயே குடித்தனம் நடத்துபவர்களுக்கு முதுகுவலி வரும் என்கின்றனர்.

அலுவலகத்திற்கு மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களில் பெரும்பாலோனோர் சென்று வருகின்றனர். நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு முதுகுவலி வர வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காலையிலோ, மாலையிலோ சரியான அளவில் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

மசாஜ் செய்வதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும். வெள்ளைப் பூண்டு எண்ணெயை வைத்து முதுகுப்புறங்களில் மசாஜ் செய்யலாம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி குடிப்பதன் மூலம் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால் கண்டிப்பாக முதுகுவலி வரும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனுக்கு சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு வைட்டமின் டி தேவை. நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் டி முக்கியத் தேவை.

முதுகுவலியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். பால், மீன் எண்ணெய், முட்டை, ஈரல், இறைச்சி, கொழுப்பு, தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையாகவே வைட்டமின் டி சத்து குறைவான அளவில் உள்ளது.

நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுப் பொருட்களில் வைட்டமின் டி சேர்க்கப்படுகிறது. கீரைகள், ராகி போன்றவைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம் இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

வைட்டமின் டி இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி சூரியஒளி மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான். இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே வைட்டமின் டி சத்து நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே!. எனவே உடலில் குறிப்பிட்ட அளவு சூரிய வெளிச்சம் படாமல் வாழ்பவர்கள் முதுகுவலியினால் அவஸ்தைப் படவேண்டியதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

பாடாய் படுத்தும் முதுகுவலியில் இருந்து தப்பிக்க காலை, மற்றும் மாலை நேரத்தில் இதமான சூரிய வெளிச்சம் படுமாறு வாக்கிங், ஜாக்கிங் செல்வதன் மூலம் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்யமுடியும் என்பது நிபுணர்களின் ஆலோசனையாகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Opera Webkit இணைய உலாவி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்]
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] []
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்]
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய: 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:54.21 மு.ப ]
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] []
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்]
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] []
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்]