ஏனைய தொழிநுட்ப செய்தி
உலகின் மிகச் சிறிய ஸ்கேனிங் கருவி கண்டுபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 01:11.03 பி.ப GMT ]
கணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம்.

இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி அவர் கூறுகையில், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது.

பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை அதிகம் என்பதால் கட்டணமும் அதிகம் வசூலிக்கிறார்கள்.

சிம்பிளாக நாமே ஒரு ஸ்கேனர் தயாரித்தால் என்ன என்ற எண்ணம், என் மனைவி முதன்முதலாக கர்ப்பமானபோது உதித்தது.

ஒலி அலைகள் தொடர்பான சோனார் துறையில் எனக்கு இருந்த அறிவும் அனுபவமும் கைகொடுத்தது.

உடனடியாக அசெம்பிள் செய்து மினி ஸ்கேனரை உருவாக்கினேன். அதன் உதவியுடன் குழந்தையை ஸ்கேன் செய்து நானும் மனைவியும் டிவி திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.

சக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து மலிவு விலை ஸ்கேனரை உருவாக்கியுள்ளேன். இதை தயாரிக்க அதிகபட்சம் ரூ.3,500தான் செலவானது. கம்ப்யூட்டர் மவுஸ் சைஸ் மட்டுமே உள்ளது.

யுஎஸ்பி போர்ட் மூலம் கணனி அல்லது மடிக்கணனியில் இணைத்தால் குழந்தையின் அசைவை ஸ்கிரீனில் பார்க்கலாம்.

ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாக இல்லை. அதிக விலை ஸ்கேனர் கருவிக்கு நிகராக இதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Opera Webkit இணைய உலாவி
நோய்களை விரட்டும் பாதாம்
விரைவில் வருகிறது 3D மவுஸ்
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] []
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்]
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] []
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்]
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ]
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] []
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்]
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]