மருத்துவ செய்தி
தாய்மை அடைவதை தடுக்கும் காபி
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 04:28.19 பி.ப GMT ]
குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தாய்மார்கள், காபி, கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏனெனில் தினசரி நான்கு கப் காபி குடிப்பது கரு உருவாவதை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

மாறிவரும் உணவுப் பழக்கம், சூழ்நிலை, மரபியல் ரீதியான பிரச்சினைகளினால் இன்றைய இளைய தலைமுறையினரிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது.

இதனால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் காபி, கொழுப்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், முளைகட்டின பயிறு வகைகள், காய்கறிகள் சாப்பிடலாம். கீரைகள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

மீன் உணவுகளை சாப்பிடலாம். சிக்கன் சாப்பிடக்கூடாது. கார்பனேட் பானங்களான பெப்ஸி, கோக் போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல் அதிகம் டென்சன் ஆனாலும் அது கருவினை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். அதேபோல் சாதாரணமாகவே தினசரி நான்கு கப் காபி குடிக்கும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு 25 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் என்னும் பொருள்தான் என்று கூறியுள்ளனர்.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு இரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

காஃப்பைன் பெண்களின் கரு முட்டையை வலுவிழக்கச் செய்கிறது எனவும், அந்த நச்சுத் தன்மையின் பாதிப்பின் விளைவாக குழந்தையில்லா நிலை கூட ஏற்படலாம் எனவும், அவர்கள் எச்சரித்துள்ளனர். கருவுறுதலில் மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்கள் காபி குடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குமாம்.

தினமும் நான்கு கோப்பை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அறிவித்து காபி பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு தானாம்.

குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதிமுக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

தாய்மையடைவதைத் தடுக்கும் காரணிகளில் புகை பிடித்தல் முதலிடம் பிடிக்கிறது. புகைப்பது குழந்தையின்மைக்கு முக்கிய காரணம், அதன் பிறகு மதுவும், அதிக எடையும், காபியும் வருகின்றன.

காஃபைனினால் நிகழும் விளைவுகளைக் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இது ஆண்களையும் பெண்களையும் சம அளவில் பாதிக்கிறது.

குறிப்பாக ஆண்களின் உயிர் அணுக்களைப் பாதித்து அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்புகளைக் கூட குறைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
Samsung Galaxy S4 கைப்பேசி விரைவில் Google Play தளத்தில்
எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!
750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
Ubuntu இயங்குதளத்துடன் கூடிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது Asus
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
அறிமுகமாகியது IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] []
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
அருமருந்தாகும் தயிர்
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:29.48 மு.ப ] []
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. [மேலும்]
மனநோய் - சில உண்மைகள்
[ புதன்கிழமை, 15 மே 2013, 06:59.56 மு.ப ]
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. [மேலும்]
கண்ணாடியால் ஏற்படும் முகத்தழும்பை நீக்க
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:58.18 பி.ப ]
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்]