சுகாதார செய்தி
உங்களது கண்கள் மற்றவர்களை கவர வேண்டுமா?
[ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 02:53.39 பி.ப GMT ]
கண்கள் சோர்வாக இருந்தால் முகமே களை இழந்து விடும். எனவே கண்களை குளிர்ச்சியாக வைத்திருந்தாலே போதும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தூக்கம் கெட்டாலே கண்களை சுற்றி கருவளையும் தோன்றும். எனவே இரவு நேரங்களில் அதிகம் டிவி, நெட் பார்க்காமல் கண்களுக்கு ரெஸ்ட் கொடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

கண் கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும்.

அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.

வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத் தரும்.

கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.

திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5-6 முறை செய்யவும்.

கண்களை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கு ஏற்ற சிறந்த பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
கடல் நீரிலிருந்து இருந்து யுரேனியம்: ஆய்வில் தகவல்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்]
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] []
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்]
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய: 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:54.21 மு.ப ]
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] []
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்]