மருத்துவ செய்தி
மார்பக புற்றுநோயை தடுக்கும் முட்டை: ஆய்வில் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 01:49.31 பி.ப GMT ]
தினசரி ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

முட்டையானது அதிக சத்து நிறைந்த உணவு, இதற்கு அதிகம் செலவு செய்ய தேவையில்லை, தினசரி இரண்டு முட்டை சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வருவதற்காக வாய்ப்புகள் 24 சதவீதம் குறையும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானவை மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். முட்டை சாப்பிடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய அச்சமின்றி வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அமெரிக்காவில் உள்ள கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் இது தொடர்பாக 3 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நமது உடலில் உள்ள செல்கள் சரியாக வேலை செய்வதற்கு சோலைன் என்ற புரதம் தேவைப்படுகிறது.

ஒரு முட்டையில் 125.5 மில்லி கிராம் சோலைன் உள்ளது. ஆண்கள், பெண்கள், வயது என்ற வித்தியாசமெல்லாம் இல்லாமல் அனைவருக்குமே இந்த சோலைன் தேவைப்படுகிறது. முக்கியமாக பெண்களுக்கு தாய்மை அடையும் பருவத்தில் இது அதிகமாக தேவைப்படுகிறது.

ஒரு நாளைக்கு நமக்கு 455 மில்லி கிராம் சோலைன் தேவைப்படுவதாகவும், காபி, முட்டை, பால் ஆகியவற்றை உட்கொள்ளும் போது இவை உற்பத்தியாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உடலில் இந்த சோலைன் குறையும் போது, மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. முட்டை உட்கொள்ளும் போது சோலைன் சுரப்பதால் மார்பக புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சோனி அறிமுகப்படுத்தும் வாட்டர் புரூவ் டேப்லட்
ஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ்: எச்சரிக்கை!!!
கூலிங் கிளாஸ் மூலம் கைபேசியை சார்ஜ் செய்யலாம்
Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது
சுவாரஸ்யமான வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்
மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க
இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்
வாழைப்பழத்தின் நன்மைகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:17.13 மு.ப ]
கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. [மேலும்]
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] []
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்]
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
[ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ]
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்]
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:55.51 மு.ப ] []
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்]
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]