மருத்துவ செய்தி
உடல் எடையை குறைத்து மாரடைப்பை தடுக்கும் வால்நட்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 09:55.19 மு.ப GMT ]
வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.

உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற
பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு
7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு
Dropbox தரும் புத்தம் புதிய வசதி
LG அறிமுகப்படுத்தும் Optimus L4 II ஸ்மார்ட் கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)
மடிக்கணனியை பாதுகாக்க சில டிப்ஸ்
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்
குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஜலதோஷத்தை போக்குவதற்கு இயற்கை வைத்தியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 12:15.04 பி.ப ]
பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது ஜலதோஷமும் சேர்ந்து வரும். [மேலும்]
Android சாதனங்களுக்கான கிளவுட் பிரிண்டிங் அப்பிளிக்கேஷன் வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 03:03.02 மு.ப ] []
கூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான கிளவுட் பிரிண்டிங் சேவையை Android பாவனையாளர்களுக்காக அறிமுகம் செய்து வைத்துள்ளது. [மேலும்]
மனித உடலில் புதிய பகுதி கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர்கள் சாதனை
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 02:56.58 மு.ப ] []
மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். [மேலும்]
Android 5.0 Key Lime Pie இயங்குதளம் விரைவில் அறிமுகமாகின்றது
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 02:37.44 மு.ப ] []
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திற்குகள் பிரபல்யமானது Android. [மேலும்]
நான்கு மடங்கு மின்சக்தியை சேமிக்கும் பேட்டரிகள் உருவாக்கம்
[ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 10:30.06 மு.ப ] []
சாதாரண லிதியம் - அயன் பேட்டரிகளை விடவும் நான்கு மடங்கு மின்சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய லிதியம் - சல்பர் பேட்டரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. [மேலும்]