| | | |
| |
| | | |
| |
| மருத்துவ செய்தி |
| கோமா எப்படி ஏற்படுகிறது? |
| [ திங்கட்கிழமை, 09 யூலை 2012, 03:10.28 மு.ப GMT ] |
மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது கோமா எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது? இதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.அவற்றில் முக்கியக் காரணம், மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளும் தன்மையுடையவை.
அத்தகைய மூளை அடிபட்டு உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளையின் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும் போது அந்தக் காலகட்ட நினைவுகள் மட்டும் பாதிக்கப்படும்.
அந்த நினைவுகள் மீண்டும் வராமல் போகும். இது ஒருவகை கோமா என்று அழைக்கப்படுகிறது.
இன்னொரு வகை கோமாவில் மூளையில் சகல பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அனிச்சைச் செயல்களான சுவாசத்தையும், இதயத்துடிப்பையும் மட்டும் எதுவும் செய்வதில்லை. அதனால் உயிர் மட்டும் இருக்கும். விளைவு, கோமா.
மற்றொரு காரணம் “ஸ்ட்ரோக்”. மூளைக்குள் ரத்தக் கட்டி ஏற்பட்டு அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் மூளைக்குள் ரத்தம் கசிந்து மூளைச் செல்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதை செரிப்ரல் திராம்பாசிஸ், செரிப்ரல் எம்போசிஸ் என்று பிரிக்கிறார்கள்.
மூளையில் சேதம் அதிகம் இல்லையென்றால் கோமாவில் இருந்து வெளியே வருவது சுலபம். நிறையப் பேர் அவ்வாறு மீண்டிருக்கிறார்கள். சிலர் வருடக்கணக்கில் கோமாவில் இருந்துவிட்டு வெளியே வந்து நலமாக வாழ்கிறார்கள். இறுதிவரை அப்படியே இருந்து இறந்து போகிறவர்களும் உண்டு.
கோமாவில் இருந்து மீள்வதும், மீளாததும் மூளையில் ஏற்படும் சேதத்தின் அளவைப் பொறுத்தது. பொதுவாக தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கர்ப்பிணிகளுக்கு அயோடின் குறைபாடு இருந்தால் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கும்: அதிர்ச்சி தகவல் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:17.13 மு.ப ] |
கருவுற்ற போது தாய்மார்களிடையே அயோடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. [மேலும்] | | இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்! |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] [ ] |
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்] | | Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ] |
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்] | | LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:55.51 மு.ப ] [ ] |
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்] | | நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|